ஓசூரில் ஊரடங்கு காலத்திற்குப் பின் இயக்கப்பட்ட ரெயில் - பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி பயணிகள் உற்சாகம்


ஓசூரில் ஊரடங்கு காலத்திற்குப் பின் இயக்கப்பட்ட ரெயில் - பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி பயணிகள் உற்சாகம்
x

கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த ரெயில் இன்று மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது.

கிருஷ்ணகிரி,

கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின்னர் இன்று ஓசூர்-யஷ்வந்த்பூர் இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் கொரோனா ஊரடங்கு காலத்தின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த ரெயில் இன்று மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது.

இதனால் அந்த ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். ரெயில் பயணிகள் சங்கத்தினர் ரெயிலை மலர்களால் அலங்கரித்து சந்தனம், குங்குமம் வைத்து பூக்களைத் தூவி பூஜை செய்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு உணவு, இனிப்பு வகைகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story