முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
x

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 3 ஆயிரத்து 237 ஆக அதிகரிப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 3 ஆயிரத்து 237 ஆக அதிகரிப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 207 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கணினி வழியில் தேர்வுகள் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த ஜூலை 5-ந்தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆயிரத்து 30 பணியிடங்கள் அதிகரிப்பட்டு மொத்தம் 3 ஆயிரத்து 237 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story