அஞ்சல் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஆத்தூரில் அஞ்சல் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோவையில் 27-ந் தேதி நடக்கிறது.
சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மண்டல அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி காலை 11 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமை அஞ்சலக கட்டிடம் 2-வது தளத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை குறைதீர்க்கும் நாளன்று நேரில் அல்லது அஞ்சல் மூலம் வருகிற 20-ந் தேதிக்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். காப்பீடு தபால் பற்றிய புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு விலாசம், பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத்தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.