தபால் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை


தபால் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
x

ரூ.22 லட்சத்தை கையாடல் செய்த தபால் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கோயம்புத்தூர்

ரூ.22 லட்சத்தை கையாடல் செய்த தபால் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தபால் அதிகாரி

ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக பணியாற்றியவர் சிவசுப்பிரமணி (வயது51). சேலத்தை சேர்ந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை பணியாற்றிய காலத்தில் தபால் அலுவலகத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தை முறையாக கணினியில் பதிவு செய்ய வில்லை.

ஆனால் வாடிக்கையாளர்களின் கணக்கு புத்தகத்தில் மட்டும் பணம் பெற்றுக் கொண்டது போல் கையால் எழுதி கொடுத்து உள்ளார். இதையடுத்து வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க வந்த போது அவர் பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

ரூ.22 லட்சம் கையாடல்

இது குறித்து தபால் அலுவலக உயர் அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்தனர். இதில் சிவசுப்பிரமணி மொத்தம் ரூ.22 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது. இது குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசுப்பிரமணியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் நடை பெற்று வந்தது. வழக்கை விசாரித்த சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜ், குற்றம்சாட்டப்பட்ட சிவசுப்பிரமணியத்துக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story