அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்


அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
x

25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

புதிய ஓய்வூதிய திட்டம்

தபால்காரர், எம்.டி.எஸ். மற்றும் ஜி.டி.எஸ். உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டாக் மித்ரா மற்றும் பொதுசேவை மையங்கள் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். சீருடைபடியை ரூ.5ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.தபால்காரர்களுக்கு பட்டுவாடா செய்வதற்கு தரமான மொபைல் போன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் வருகிற 23-ந்தேதி வரை கருப்பு பட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருப்பு பட்டை அணிந்து பணி

அந்தவகையில் நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதில் செயலாளர்கள், குமரன், முருகேசன், ஆலோசகர் விஸ்வநாதன் உள்பட தபால்காரர்கள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.


Next Story