சாவில் சந்தேகம் இருப்பதாக பேரன் புகார்:மூதாட்டியின் உடலை தோண்டி மீண்டும் பிரேத பரிசோதனை


சாவில் சந்தேகம் இருப்பதாக பேரன் புகார்:மூதாட்டியின் உடலை தோண்டி மீண்டும் பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 6 July 2023 1:33 AM IST (Updated: 6 July 2023 5:49 PM IST)
t-max-icont-min-icon

சாவில் சந்தேகம் இருப்பதாக பேரன் புகார்:மூதாட்டியின் உடலை தோண்டி மீண்டும் பிரேத பரிசோதனைமல்லூர் அருகே பரபரப்பு

சேலம்

பனமரத்துப்பட்டி

மல்லூர் அருகே சாவில் சந்தேகம் இருப்பதாக பேரன் கூறிய புகாரை தொடர்ந்து மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மூதாட்டி சாவு

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே அம்மாபாளையம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (வயது 68). வீட்டில் தனியாக வசித்து வந்த சின்னப்பொண்ணு கடந்த 2-ந் தேதி இறந்து விட்டார். அவரை உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர்.

இதற்கிடையே மூதாட்டியின் பேரன் சுரேஷ்குமார், தனது பாட்டி சின்னப்பொண்ணு உடலில் காயங்கள் இருந்தன. எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்.

மீண்டும் தோண்டி எடுப்பு

எனவே பாட்டியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்று மல்லூர் போலீசில் சுரேஷ்குமார் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில் சேலம் தாசில்தார் செம்மலை, மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி ஆகியோர் முன்னிலையில் சின்னப்பொண்ணு உடல் தோண்டி எடுக்கப்பட்டது. டாக்டர் கோகுல்ராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சின்னப்பொண்ணு உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story