மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்: மின் தடையால் பொதுமக்கள் அவதி
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்க தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள், பணியாளர்கள் கிருஷ்ணகிரிக்கு சென்றனர். இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை, திம்மசந்திரம், தின்னூர், பாலதொட்டனப்பள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று காலை திடீரென மின் தடை ஏற்பட்டது. இந்த மின்தடையால் அரசு அலுவலகங்கள், வங்கிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மாலை மின்வாரிய ஊழியர்கள் மின் பழுதை சரி செய்ததை தொடர்ந்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.
Next Story