சிலுக்குவார்பட்டி, சித்தர்கள்நத்தம் பகுதிகளில் 7-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்


சிலுக்குவார்பட்டி, சித்தர்கள்நத்தம் பகுதிகளில் 7-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
x

சிலுக்குவார்பட்டி, சித்தர்கள்நத்தம் பகுதிகளில் 7-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

நிலக்கோட்டையை அடுத்த சித்தர்கள்நத்தம் துணை மின் நிலையத்தில் 7-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சிலுக்குவார்பட்டி, சித்தர்கள்நத்தம், சிறுநாயக்கன்பட்டி, நூத்துலாபுரம், அம்மாபட்டி, மைக்கேல்பாளையம், அணைப்பட்டி, குண்டலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 7-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை நிலக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

இதேபோல் நத்தம் அருகே எல்.வலையபட்டி துணை மின் நிலையத்தில் 7-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 7-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசுவரன் தெரிவித்துள்ளார்.


Next Story