ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 27 Feb 2023 2:00 AM IST (Updated: 27 Feb 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகள், லக்கையன்கோட்டை, புதுஅத்திக்கோம்பை, கே.அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, வெரியப்பூர், புலியூர்நத்தம், வடகாடு, அரசப்பபிள்ளைபட்டி, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story