நாளை மின்நிறுத்தம்

தஞ்சையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை கரந்தை துணை மின் நிலையத்தில் பூக்குளம் மின்பாதையில் மின்கம்பிகள் மாற்றும் பணி நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அன்பழகன்நகர், ஆனந்தம்நகர், மேட்டுத்தெரு, சுங்கான்திடல், சின்னத்தெரு, பெரியதெரு, ஜெகநாதன்நகர், வடுகத்தெரு, ராஜராஜசோழன்நகர், திருவள்ளுவர் காலனி, பள்ளியக்கிரஹாரம் கடைதெரு மற்றும் பைபாஸ் ஆகிய பகுதிகளிலும், கம்பம் மாற்றும் பணிக்காக மூலைஅனுமார்கோவில், போலீஸ் ராமசாமி நாயக்கர் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






