சிவகங்கை பகுதிகளில் இன்று மின்தடை
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிவகங்கை, மதகுபட்டி, காளையார்கோவில் மற்றும் மறவமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது
சிவகங்கை,
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிவகங்கை, மதகுபட்டி, காளையார்கோவில் மற்றும் மறவமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணி
சிவகங்கை துணை மின் நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தொழில் பேட்டை, குறிஞ்சி நகர், 48 காலனி, ஆரிய பவன் நகர், ரோஸ் நகர், பால் பண்ணை, ராகினிபட்டி, போலீஸ் குவாட்டர்ஸ், பழமலை நகர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இதேபோல் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதகுபட்டி, தச்சம்பட்டி, ராமலிங்கபுரம், காடனேரி, அம்மன் பட்டி, ஒக்கூர், காளையார்மங்கலம், அய்யம்பட்டி, கொழுக்கட்டைப்பட்டி, அண்ணா நகர், ஓ.புதூர், நாலு கோட்டை, கருங்காப்பட்டி, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மறவமங்கலம்
மேலும் காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மூர்த்தி நகர், கிருஷ்ணா நகர், செல்லையா ஊருணி, அய்யனார் குளம், அரிநாச்சி குடியிருப்பு, காளக்கண்மாய், நுத்தன் கண்மாய், எஸ்.எஸ்.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இதேபோல் மறவமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மறவமங்கலம், சிரமம், சமத்துவபுரம், வேலாரேந்தல், நந்தனூர், சேம்பர், புல்லுக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.