பெரியகுளம், வைகை அணை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


பெரியகுளம், வைகை அணை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 5 May 2023 9:00 PM GMT (Updated: 5 May 2023 9:01 PM GMT)

பெரியகுளம், வைகை அணை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தேனி

பெரியகுளம் மற்றும் வைகை அணை துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பெரியகுளம் நகர் பகுதிகள், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள், வைகை அணை பகுதிகள், ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூர், ஜம்புலிபுத்தூர், மருகால்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.


Next Story