நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

சேந்தமங்கலம், வேலூர், ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

சேந்தமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

வேலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறு.

இதேபோல் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் நாகராஜன், ராணி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.


Next Story