அய்யம்பேட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
அய்யம்பேட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
தஞ்சாவூர்
அய்யம்பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் அய்யம்பேட்டை நகரம் முழுவதும், கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, வழுத்தூர், இளங்கார்குடி, அகரமாங்குடி, வடக்கு மாங்குடி, பசுபதிகோவில், மாத்தூர், வீரசிங்கம் பேட்டை, நெடார், வயலூர், ராமாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை பாபநாசம் உதவி செயற்பொறியாளர் கருணாகரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story