தேவகோட்டை பகுதியில் இன்று மின்தடை
தேவகோட்டை பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது
சிவகங்கை
தேவகோட்டை
தேவகோட்டை துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே தேவகோட்டை டவுன், ராம்நகர், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை தேவகோட்டை உதவிசெயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story