கொட்டாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை


கொட்டாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை
x

பராமரிப்பு பணி காரணமாக கொட்டாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே  கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலைமுடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, வெ.புதூர், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story