கோட்டைப்பட்டினம், கீரமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை


கோட்டைப்பட்டினம், கீரமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை
x

கோட்டைப்பட்டினம், கீரமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

நாளை மின் தடை

கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, திருப்புனவாசல், மீமிசல், ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

கீரமங்கலம், பெரியாளூர்...

இதேேபால் கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story