குளத்தூர், நார்த்தாமலை பகுதிகளில் நாளை மின்தடை
குளத்தூர், நார்த்தாமலை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
புதுக்கோட்டை
கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், (கீரனூர் பேரூராட்சி பகுதிகளில் நீங்களாக) குளத்தூர், இளையாவயல், நாஞ்சூர், பிரகதாம்பாள்புரம், கிருஷ்ணன் பாரப்பட்டி, சத்தியமங்கலம், முத்துக்காடு, காவேரி நகர், திருமலைராயபுரம், உப்பிலியக்குடி, தாயினிப்பட்டி, விளத்துப்பட்டி, ஒடுக்கூர், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் அவர் கூறினார்.
Related Tags :
Next Story