சிவகங்கை, திருப்பத்தூர் பகுதிகளில் இன்று மின்தடை


சிவகங்கை, திருப்பத்தூர் பகுதிகளில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 24 Jun 2022 12:30 AM IST (Updated: 24 Jun 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை, திருப்பத்தூர் பகுதிகளில் இன்று பராமரிப்பு பணி நடைெபறுவதால் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

சிவகங்கை


சிவகங்கை, திருப்பத்தூர் பகுதிகளில் இன்று பராமரிப்பு பணி நடைெபறுவதால் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி

சிவகங்கை, மதகுபட்டி மற்றும் இடையமேலூர் பகுதிகளில் இன்று பராமரிப்பு பணி நடக்கிறது. சிவகங்கை நகர் மின் பகிர்மானத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காஞ்சிரங்கால், அம்மன் நகர், எம்.ஜி.ஆர். நகர், கக்கன்ஜி காலனி, தென்றல் நகர், அன்பு நகர், புதூர் கிருஷ்ணா நகர், தொழில் பேட்டை, ராகினிபட்டி, என்.ஜி.ஓ.காலனி, ஆயுதப்படை குடியிருப்பு, குறிஞ்சி நகர், அண்ணா நகர், அழகு மெய்ஞானபுரம், ரோஸ் நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மதகுபட்டி

இதேபோல் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் பட்டமங்கலம் உயரழுத்த மின் பாதையில் புதிய மின் கம்பங்கள் நடும் பணிகள் நடைபெறுவதால் இன்று(வெள்ளிக்கிழமை)காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஒக்கூர், மதகுபட்டி, கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காபட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர், பர்மா காலனி, நாலுகோட்டை, காடனேரி, அச்சம்பட்டி, ராமலிங்கபுரம், வீழநேரி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இடையமேலூர்

மேலும் இடையமேலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் 2 மணிவரை தமராக்கி, குமாரபட்டி, வாகுளத்துப்பட்டி, மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் மாதவராயன்பட்டி பீடர் மூலம் மின் வினியோகம் செய்யப்படும் திருக்கோஷ்டியூர், கருவேல்குறிச்சி, தானிப்பட்டி, எம்.புதூர், சேந்தினிவயல், காட்டாம்பூர், சிந்தாமணிபட்டி, கோட்டையிருப்பு, சுண்ணாம்பிருப்பு, கருப்பூர் மற்றும் நாட்டார்மங்கலம் ஆகிய பகுதிகளிலும், எஸ்.புதூர் துணை மின்நிலையத்தில் உலகம்பட்டி பீடர் மூலம் மின் வினியோகம் செய்யப்படும் உலகம்பட்டி, படமிஞ்சி, தெம்மாபட்டி, மாந்தாங்குடிபட்டி, அய்யாபட்டி, வேலம்பட்டி மற்றும் ஆரணிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மின்கம்பங்கள் ஊன்றும் பணிநடைபெறுவதால் இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மேலும் வண்ணாரிருப்பு பீடர் மூலம் மின் வினியோகம் செய்யப்படும் கட்டுகுடிபட்டி, பாலக்குறிச்சி, நெடுவயல், சீகம்பட்டி, ரெகுகநாகப்பட்டி, வைரவன்பட்டி, மேலவண்ணாரிருப்பு, மின்னமலைப்பட்டி, திருவழுந்தூர், மற்றும் கல்லங்காலப்பபட்டி ஆகிய பகுதிகளிலும், வி.புழுதிப்பட்டி பீடர் மூலம் மின் வினியோகம் செய்யப்படும் கே.புதுப்பட்டி, செட்டிக்குறிச்சி, தர்மபட்டி, புழுதிப்பட்டி, குன்னத்தூர், சூரப்பட்டி, ஆகிய பகுதிகளிலும், வி.குளத்துப்பட்டி பீடர் மூலம் மின் வினியோகம் செய்யப்படும் திருமலைக்குடி, முசுண்டப்பட்டி, கானப்பட்டி, கருமிப்பட்டி, சின்னாரம்பட்டி, இரணிப்பட்டி மற்றும் வலசைப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மின் கம்பங்கள் ஊன்றும் பணி காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை திருப்பத்தூர் மின்செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்து உள்ளார்.


Related Tags :
Next Story