இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Sept 2025 7:16 PM IST
''நான் அவருடைய பெரிய ரசிகை...'' - கல்யாணி பிரியதர்ஷன்
சில வருடங்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் கல்யாணி பிரியதர்ஷன் பேசிய வீடியோ ஒணையத்தில் வைரலாகி வருகிறது.
- 13 Sept 2025 6:42 PM IST
"நீங்க என்ன ரஜினியா, அஜித்தா, விஜய்யா..." - நாஞ்சில் விஜயனுக்கு திருநங்கை கேள்வி
நடிகர் நாஞ்சில் விஜயன் கூறிய கருத்துக்கு திருநங்கை வைஷ்ணவி புதிய வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார். தாம் பப்ளிசிட்டிக்காக இதைச் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். நாஞ்சில் விஜயன் என்ன ரஜினியா? கமலா? அஜித்தா? விஜயா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
- 13 Sept 2025 6:09 PM IST
''லிட்டில் ஹார்ட்ஸ்'' படம் மூலம் இளைஞர்களின் இதயங்களை வென்ற நடிகை...அவரின் அடுத்த படம் எது தெரியுமா?
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியான ''லிட்டில் ஹார்ட்ஸ்'' திரைப்படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில், மவுலி மற்றும் ஷிவானி நகரம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- 13 Sept 2025 6:05 PM IST
ஒரு காலத்தில் ரெயிலில் பாடிய சிறுவன்...இப்போது பிரபல நடிகர்...யார் தெரியுமா?
சாதாரண ஒரு மனிதருக்கு சினிமா உலகில் சிறந்து விளங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிறுவன் சினிமா துறையில் தனது முத்திரையை பதித்திருக்கிறார். பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
- 13 Sept 2025 5:05 PM IST
''யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம், நானும் நிற்கிறேன் '' - நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் தான் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.இப்படத்திற்கு ''நான் தான் சிஎம்'' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அவரே எழுதி இயக்குகிறார்.
- 13 Sept 2025 4:30 PM IST
''படம் இல்லை...பதற்றம் இல்லை'' - சமந்தா
திரைப்படங்களைப் பொறுத்தவரை சமந்தா தனது ரசிகர்களிடமிருந்து விலகி இருந்தாலும், அவர் எப்போதும் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கிறார். தனது ரசிகர்களுடன் உரையாடுவது மட்டுமல்லாமல், தன்னைப் பற்றிய அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.
- 13 Sept 2025 3:32 PM IST
சாய் பல்லவியின் முதல் பாலிவுட் படம்...பெயர், ரிலீஸ் தேதியில் மாற்றம்?
நடிகை சாய்பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பெயர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.
- 13 Sept 2025 3:10 PM IST
''அரசியல் களத்திற்குள் அதிர்வலை''...வைரலாகும் நடிகர் பார்த்திபனின் பதிவு
நடிகர் பார்த்திபன் இன்று மாலை அரசியல் களத்தில் அதிவலையை ஏற்படுத்தும் அறிவிப்பு வரப்போவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
















