சோளிங்கரில் நாளை மின்நிறுத்தம்


சோளிங்கரில் நாளை மின்நிறுத்தம்
x

சோளிங்கர், பாணாவரம், பொன்னை பகுதிகளில் நாளை சனிக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் துணை மின் நிலையம் மற்றும் மேல் வெங்கடாபுரம் துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோளிங்கர், எறும்பி, தாடூர், கல்பட்டு, தாளிக்கால், போளிப்பாக்கம், பழையபாளையம், தப்பூர், பாண்டியநல்லூர், பாணாவரம், சோமசுமுத்திரம், கரிக்கல், மேல்வெங்கடாபுரம், ஜம்புகுளம், கொடைக்கல், சூரை, மருதாளம், தலங்கை, பொன்னை, ஒட்டநேரி, கீரைசாத்து, மிளகாய்குப்பம், எஸ்.என்.பாளையம், கே.என். பாளையம், பொன்னை புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story