தாம்பரம், பெரம்பூர் பகுதிகளில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம்: கடப்பேரி உமையாள்புரம் பகுதி, 1 முதல் 7 வரை மெயின் ரோடு நியூ காலனி, பல்லாவரம் நகராட்சி அலுவலகம், செல்வம் பிளாட், அன்னை இந்திரா நகர், பிள்ளையார் கோயில் தெரு.
பெரம்பூர்: புழல் ரெட்டேரி முழுவதும், பரிமளம் நகர், லட்சுமி நகர், வி.எம்.கே நகர், செகரட்ரியேட் காலனி, மூர்த்தி நகர், பாலாஜி நகர், விநாயகபுரம், காஞ்சி நகர், முத்தமிழ் நகர் 1-வது, 6-வது மற்றும் 8-வது பிளாக்.
பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும்.
Related Tags :
Next Story






