திருவரங்குளம், பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


திருவரங்குளம், பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

திருவரங்குளம், பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியாா் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், பாரி நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லாத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிளக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை இயக்குதலும், காத்தலும் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொிவித்துள்ளார்.

பொன்னமராவதி, தூத்தூர்...

கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கொப்பனாப்பட்டி, பொன்னமராவதி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, பிடாரம்பட்டி, தொட்டியம்பட்டி, மைலாப்பூர், அஞ்சுபுளிப்பட்டி, வலையப்பட்டி, வேகுப்பட்டி, செம்பூதி, கொன்னைப்பட்டி, சுந்தரசோழபுரம், மேக்கினிப்பட்டி, செவலூர், கோவனூர், வாழைக்குறிச்சி, நெய்வேலி, கூடலூர், மேலப்பனையூர், குழிபிறை, பணையப்பட்டி, ஆத்தூர், ராராபுரம், ஆலவயல், செம்மலாப்பட்டி, கண்டியாநத்தம், தூத்தூர், சொக்கநாதபட்டி, நகரப்பட்டி, அம்மாபட்டி, ஈச்சம்பட்டி, சங்கம்பட்டி, கல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.


Next Story