விழுப்புரம், வளவனூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
விழுப்புரம், வளவனூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
விழுப்புரம்
விழுப்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் மின்னூட்டியில் இன்று(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிழக்கு புதுச்சேரி சாலை, கல்லூரி சாலை ஹவுசிங்போர்டு, இ.பி. காலனி, அறிஞர் அண்ணா அரசு கல்லூரி, கீழ்பெரும்பாக்கம், இந்திரா நகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது என விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். இதேபோல் வளவனூர் துணை மின் நிலைய வளாகத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பனங்குப்பம், கிராஸ் ரோடு, நல்லரசம்பேட்டை, சகாதேவன் பேட்டை, குடுமியாங்குப்பம், மல்ராஜங்குப்பம், செங்காடு, ராமையன்பாளையம், சுந்தரிபாளையம், மழவராயனூர், வளவனூர், கல்லப்பட்டு, தனசிங்குபாளையம் பெத்தரெட்டிகுப்பம், கூட்டுறவு நகர், குமாரகுப்பம், புதுகுளம், குருமங்கோட்டை, மேல்பாதி, நறையூர், இளங்காடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.