நாளை மறுநாள் மின் நிறுத்தம்


நாளை மறுநாள் மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பாச்சனூர், திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்சார வினியோகம் இருக்காது.

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர், கெடார், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய துணை மின் நிலையத்திற்குட்பட்ட வி.மடம், மேலமங்கலம், வாழப்பட்டு ஆகிய மின்னூட்டிகளில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பாச்சனூர் காலனி, தென்குச்சிப்பாளையம், ராசாப்பாளையம், சேர்ந்தனூர், அரசமங்கலம், மேலமங்கலம், மழையாம்பட்டு, கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், மாதம்பட்டு, சூரப்பட்டு, கெடார், அரும்புலி, வீரமூர், சிறுவாலை, வாழப்பட்டு, செம்மேடு, வெங்கந்தூர், ஏரிப்பாளையம், அதனூர், விநாயகபுரம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.


Next Story