இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பழைய பஸ் நிலையம், மேலரதவீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, எல்.ஐ.ஜி. காலனி, கல்லூரி சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினிேயாகம் இருக்காது.

அதேபோல புறநகர் பகுதிகளான குல்லூர் சந்தை, பெரியவள்ளிகுளம், ஆர்.எஸ். நகர், அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, வேலுச்சாமி நகர், கருப்பசாமி நகர், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி, முத்துராமன்பட்டி, பாண்டியன் நகரில் முத்தால் நகரில் ஒரு பகுதி, காந்தி நகரில் ஒரு பகுதி, கே.கே.எஸ். எஸ்.என். நகர், சத்ய சாய் நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் முரளிதரன் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லி, மல்லிப்புதூர், ஈஞ்சார். நடுவம்பட்டி, வேண்டுராயபுரம், சாமி நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை கூறினார்.

1 More update

Next Story