இன்று மின்சாரம் நிறுத்தம்
ரெட்டியார்சத்திரம் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
திண்டுக்கல்
ரெட்டியார்சத்திரம் துணை மின்நிலையத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி மாங்கரை, அம்மாபட்டி, ரெட்டியார்சத்திரம், பொட்டிநாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, அணைப்பட்டி, பாலம் ராஜக்காபட்டி, கதிரையன்குளம், எல்லப்பட்டி, முத்தனம்பட்டி, வெயிலடிச்சான் பட்டி, பங்காருபுரம், பழக்கனூத்து, நீலமலைக்கோட்டை மற்றும் மில் பீடர் முழுவதும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை, ரெட்டியார்சத்திரம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story