இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

கன்னிவாடி, அய்யலூர் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது

திண்டுக்கல்

கன்னிவாடி துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கன்னிவாடி, சோனிகோவில் மேற்கு தெரு, அரண்மனை தெரு, பத்திரப்பதிவு அலுவலக பகுதி, நவாப்பட்டி, கீழ திப்பம்பட்டி, மணியக்காரன்பட்டி, குரும்பபட்டி, தருமத்துப்பட்டி, குயவன் நாயக்கன்பட்டி, பழைய கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று கன்னிவாடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அய்யலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. இதையொட்டி அய்யலூர், குருந்தம்பட்டி, தங்கம்மாபட்டி, வளவிசெட்டிபட்டி, வடுகபட்டி, மாமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. இதையொட்டி பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டி பிரிவு, பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, அன்னைநகர், சாமியார்பட்டி, வட்டப்பாறை, சரவணா மில் பகுதிகள், ஆதிலட்சுமிபுரம், சீவல்சரகு, வக்கம்பட்டி, மைக்கேல்பட்டி, மும்மம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சின்னாளப்பட்டி மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story