கண்டோன்மெண்ட் பகுதியில் இன்று மின் நிறுத்தம்


கண்டோன்மெண்ட் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x

கண்டோன்மெண்ட் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி தென்னூர் நகரியம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் ரெங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-திருச்சி நகரியம் கோட்டம், கண்டோன்மெண்ட் பிரிவுக்கு உட்பட்ட வார்னஸ்சாலை, வருமானவரித்துறை அலுவலக ரோடு, சோனா மீனா தியேட்டர் பகுதி, சுங்கத்துறை அலுவலகம், முடுக்குத்தெரு, ஒத்தக்கடை, முத்தரையர் சிலை பகுதி ஆகிய இடங்களில் புதிய காற்றுத்திறப்பான் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story