ராமேசுவரம், முதுகுளத்தூர் பகுதிகளில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக ராமேசுவரம், முதுகுளத்தூர் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
ராமேசுவரம்,
மண்டபம் துணை மின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்பு பணி இன்று (புதன்கிழமை) நடக்கிறது. எனவே ராமேசுவரம் நகர் அனைத்து பகுதிகளிலும். தங்கச்சிமடம், அக்காள் மடம், பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், மரைக்காயர்பட்டினம், வேதாளை, எஸ்.மடை, அரியமான் பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்
முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மேலத்தூவல், கீழத்தூவல், முதுகுளத்தூர் டவுன், தூரி, செல்வநாயகபுரம், காக்கூர், புளியங்குடி, ஆதனகுறிச்சி, கீரனூர், மணலூர், ஆரபத்தி, நல்லூர், ஆத்திகுளம் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.