வேலூர், புதுப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை


வேலூர், புதுப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை
x

வேலூர், புதுப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தொழிற்சாலை பகுதிகள், வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story