விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம்


விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம்
x

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, பெண்ணாடம் பகுதியில் இன்று(சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் மின்வாரியம் பூதாமூர் துணைமின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக விருத்தாசலம் நகரம், தென்னக ரெயில்வே குடியிருப்பு, கடைவீதி, சேலம் மெயின் ரோடு, கடலூர் மெயின் ரோடு, ஜங்ஷன் ரோடு, பெரியார்நகர் தெற்கு மற்றும் வடக்கு, பூதாமூர், சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, சாத்தமங்கலம், குப்பநத்தம், கண்டியாங்குப்பம் மற்றும் முதனை துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

இ்தேபோல், சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சிதம்பரம் நகரம், அம்மாபேட்டை, வண்டிகேட், சி.முட்லூர், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலூர், வல்லம்படுகை, தில்லை நாயகபுரம், கீழமூங்கிலடி, பின்னத்தூர், கிள்ளை, பிச்சாவரம், கனகரபட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கே.டி.பாளை, சிவபுரி, மாரியப்பாநகர், அண்ணாமலைநகர், பெராம்பட்டு, கீரப்பாளையம், எண்ணாநகரம், கன்னங்குடி, வயலூர், சிலுவைபுரம், மேலமூங்கிலடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

பெண்ணாடம், திட்டக்குடி

பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பெண்ணாடம், பெண்ணாடம் கடைவீதி, மருத்துவமனை, பட்டித்தெரு, பெருமாள் கோவில்தெரு, காமராஜர் நகர், சோழன்நகர், தாதாங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன், அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, இறையூர், கூடலூர், கொடிக்களம், திருவட்டத்துறை, பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி, குடிகாடு, சவுந்திரசோழபுரம், செம்பேரி, பெலாந்துறை, பாசிக்குளம், அரியராவி, பெ.பூவனுார், ஓ.கீரனூர், பெரியகொசப்பள்ளம், மேலூர், மருதத்தூர், எரப்பாவூர், வடகரை, கோனூர், நந்திமங்கலம், கொல்லத்தங்குறிச்சி, தி.அகரம், முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, திட்டக்குடி நகரம், கோழியூர், வதிஷ்டபுரம், பட்டூர், எழுமாத்தூர், போத்திரமங்கலம், கோடங்குடி, பெருமுளை, சிறுமுளை, புலிவலம், புதுக்குளம், ஈ.கீரனூர், செவ்வேரி, நெடுங்குளம், ஆதமங்கலம், வையங்குடி, நாவலூர், நிதிநத்தம், ஏ.அகரம், நெய்வாசல், ஆவினங்குடி, கொட்டாரம், தாழ நல்லூர், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, வெண்கரும்பூர், குருக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவல் மின்வாரிய செயற்பொறியாளர்கள் சுகன்யா, ஜெயந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story