நீடாமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்


நீடாமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 5 July 2023 11:13 AM GMT)

நீடாமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துைண மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சகுளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் க.பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.


Next Story