விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 31 Aug 2023 6:45 PM GMT (Updated: 31 Aug 2023 6:45 PM GMT)

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட விழுப்புரம் நகரம், மாம்பழப்பட்டு மின்னூட்டிகளில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை விழுப்புரம் கே.கே.சாலை, வி.மருதூர், நரசிங்கபுரம், கந்தசாமி லே-அவுட், பார்த்தசாரதி லே-அவுட், வில்லியம் லே-அவுட், ஆறுமுகா லே-அவுட், எஸ்.பி.எஸ். நகர், எஸ்.ஐ.எஸ். நகர், கணேஷ் நகர், கவுதம் நகர், நண்பன் நகர், ராஜீவ்காந்தி நகர், அண்ணா நகர், மணி நகர், ஸ்ரீனிவாசா நகர், திரு.வி.க. சாலை, பூந்தோட்டம், நேருஜி சாலை, நன்னாடு, இந்திரா நகர், தோகைப்பாடி, வெண்மணியாத்தூர், வேடம்பட்டு, கப்பூர், பெரும்பாக்கம், வி.ஆர்.பாளையம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் அரசூர், திருவெண்ணெய்நல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பரிக்கல், ஆனத்தூர், திருநாவலூர் மின்னூட்டிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துலக்கம்பட்டு, பெரியசெவலை கரும்பு ஆலை, ஆமூர், மாரனோடை, கொண்டசமுத்திரம், வேலூர், பரிக்கல், கூவாகம், டி.கொரட்டூர், பெரும்பாக்கம், இருந்தை, ஆனத்தூர், டி.குமாரமங்கலம், பொய்கைஅரசூர, அரசூர், கே.வி.பாளையம், சித்தானங்கூர், சேத்தனூர், மடப்பட்டு, இருந்தை காலனி, பருகம்பட்டு ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

மேலும் விக்கிரவாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட விக்கிரவாண்டி நகரம் மின்னூட்டியில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை முண்டியம்பாக்கம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.


Next Story