நாளை மின்சாரம் நிறுத்தம்
கள்ளிமந்தையம், வேடசந்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன்வலசு, பொருளுர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, கள்ளிமந்தையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்தனமுத்தையா தெரிவித்துள்ளார்.
வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை உயர் அழுத்த மின்பாதையில் நாளை சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி சேனன்கோட்டை, மகாத்மா நகர், ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவ்வலூத்து, சுள்ளெறும்பு, குருநாதநாயக்கனூர், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, கேதையுறும்பு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று வேடசந்தூர் உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.