நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்


விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான விருதுநகர் பழைய பஸ் நிலையம், மேலரதவீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, எல்.ஐ.ஜி. காலனி, கல்லூரிசாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

அதேபோல புறநகர் பகுதிகளான குல்லூர் சந்தை, பெரியவள்ளிகுளம், ஆர்.எஸ். நகர், அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, ரோசல்பட்டி, கருப்பசாமி நகர், வடமலைகுறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி, முத்துராமன்பட்டி, பாண்டியன் நகரில் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், சத்யசாய் நகர், பேராலி ரோடு ஆகிய பகுதிகளிலும் நாளை மின்வினியோகம் இருக்காது.

துலுக்கப்பட்டி

துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துலுக்கப்பட்டி, ஆர்.ஆர். நகர், முக்கு ரோடு, வச்சகாரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், கன்னி சேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேல சின்னையாபுரம், அம்மாபட்டி, ஒண்டிப்புலி நாயக்கனூர், வாய் பூட்டான் பட்டி, இனாம் ரெட்டியபட்டி, கணபதிமில் குவார்ட்டர்ஸ் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் பாபு கூறினார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள முடங்கியார் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. ஆதலால் தாலுகா அலுவலகம், பச்ச மடம், ஆவரம்பட்டி, காந்தி கலை மன்றம், மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை ரவுண்டானா, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில் தெரு, திரெவுபதி அம்மன் கோவில் தெரு, ரெயில்வே பீடர் ரோடு, முடங்கியார் ரோடு, சம்பந்தபுரம், தென்காசி ரோடு, அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி, அய்யனார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.


Next Story