நாளை மின்நிறுத்தம்


நாளை மின்நிறுத்தம்
x

திருபுவனம், திருநாகேஸ்வரத்தில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

திருநாகேஸ்வரம் துணை மின்நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக மின்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் திருநாகேஸ்வரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் திருநீலக்குடி, ஆவணியாபுரம், எஸ்.புதூர், திருபுவனம் இண்டஸ்ட்ரியல், திருநாகேஸ்வரம், தண்டந்தோட்டம், முருக்கங்குடி மின்பாதையில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதைப்போவல திருநீலக்குடி, திருநாகேஸ்வரம், விட்டலூர், ஏழாம்கட்டளை, அந்தமங்கலம், திருபுவனம், அம்மாசத்திரம், திருபுவனம் இன்டஸ்டிரியல் எஸ்டேட், முருக்கங்குடி, தண்டந்தோட்டம், ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், நெடார், புத்தகரம், அம்மன்குடி, தேப்பெருமாநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story