நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தோக்கவாடி, வரப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தச்சங்காட்டு பாளையம், காடச்சநல்லூர், குப்புச்சிபாளையம், வேலாத்தா கோவில், டி.ஜி.பாளையம், பள்ளி கவுண்டம்பாளையம், ஆனங்கூர், பழையபாளையம், புளியம்பட்டியம் பாளையம், ஆண்டிகாடு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
குமாரபாளையம்
இதேபோல் குமாரபாளையம் அருகே சமயசங்கிலி துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாய்க்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திப்பாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஒட்டமெத்தை மற்றும் ஈரோடு மாவட்டம் பிராமண பெரிய அக்ரஹாரம், சத்தி ரோடு அக்ரஹாரம், பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், சுண்ணாம்பு ஓடை, நெறிக்கல்மேடு, தாசில்தார் தோட்டம், 16 ரோடு, அதியமான் நகர், செங்கோட்டையன் நகர், வைரம்பாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருவேப்பம்பட்டி, ஆத்தூராம்பாளையம், நாராயணம்பாளையம், அம்மாபாளையம், சீனிவாசம்பாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, அணிமூர், ஆண்டிபாளையம், தோக்ககவாடி, வரகூராம்பட்டி, செங்கோடம்பாளையம் முதல் சிந்தம்பாளையம் வரை, கைலாசம்பாளையம் முதல் திருமங்கலம் வரை உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
மல்லசமுத்திரம்
மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டபாளையம், கரியகவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைப்பட்டி, செம்பாம் பாளையம், கூத்தாநத்தம், காளிப்பட்டி, மங்களம், கரட்டு வளவு, சின்ன காளிப்பட்டி, செண்பகமகாதேவி, கொளந்தானூர், கண்டர்குலமாணிக்கம், மாமுண்டி, சப்பையாபுரம், நாச்சிபட்டி, கட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் கோபால், முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.