நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

பராமரிப்பு பணிகள்

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெட்டாலா, குரங்காத்துப் பள்ளம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர்பந்தல் காடு, நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, பழனியப்பனூர், பச்சுடையாம்பாளையம், தொ.ஜேடர்பாளையம், வெள்ளகல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

குமாரபாளையம்

இதேபோல் குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், காட்டுவலசு, கோட்டைமேடு, வேமன் சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், ஓலப்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு, வளையக்காரனூர், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் எஸ்.பி.பி காலனி அருகிலுள்ள துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளிபாளையம், வெடியரசன் பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணா நகர், கடச்சநல்லூர், தாஜ்நகர், காவேரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் சபாநாயகம், கோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story