நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சேலம்

வாழப்பாடி கோட்டம் புத்திரகவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புத்திரகவுண்டம்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனூர், காந்திநகர், தளவாய்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், சின்னமசமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, வைத்தியக்கவுண்டன்புதூர், பெரியகிருஷ்ணாபுரம், முத்தானூர், படையாச்சியூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை வாழப்பாடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story