நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

பழனி, குஜிலியம்பாறை, கோவிலூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

பழனியை அடுத்த வாகரை துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி வாகரை, மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, திருவாண்டபுரம், கஞ்சிக்காளிவலசு, அப்பனூத்து, தொப்பம்பட்டி, வேலம்பட்டி, ஆலாவலசு, புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, பூசாரிக்கவுண்டன்வலசு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

இதேபோல் எரியோடு அருகே உள்ள கோவிலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி ஆர்.கோம்பை, புளியம்பட்டி, வடுகம்பாடி, குஜிலியம்பாறை, ஆர்.புதுக்கோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, கோவிலூர், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிபட்டி, சத்திரப்பட்டி, சின்னலூப்பை, அழகாபுரி, ஆர்.வெள்ளோடு, குவாரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று கோவிலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.

வள்ளிபட்டி, சத்திரப்பட்டி, சின்னுலுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது. இதையொட்டி அம்மாபட்டி, ராமகிரி, மல்லபுரம், குஜிலியம்பாறை, இலுப்பபட்டி, புளியம்பட்டி, சி.சி சி.குவாரி, உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், வள்ளிபட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைகாரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதநாயக்கனூர், இடையபட்டி, காளப்பட்டி, பூசாரிபட்டி, திருமக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று குஜிலியம்பாறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.

----


Next Story