நாளை மின்நிறுத்தம்


நாளை மின்நிறுத்தம்
x

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

பேராவூரணி:

பேராவூரணி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான பெருமகளூர், ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வா.கொல்லைக்காடு, பேராவூரணி நகர், ஆவணம், பைங்கால், சித்தாத்திக்காடு, கொன்றைக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், செருவாவிடுதி, சித்துக்காடு, ரெட்டவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதேபோல் சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் குருவிக்கரம்பை, சேதுபாவாசத்திரம், கள்ளம்பட்டி, கழனிவாசல், மருங்கப்பள்ளம், செருப்பாலக்காடு, பேராவூரணி சேதுரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story