புத்தாம்பூர், செம்பாட்டூர், குன்றாண்டார்கோவில் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


புத்தாம்பூர், செம்பாட்டூர், குன்றாண்டார்கோவில் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புத்தாம்பூர், செம்பாட்டூர், குன்றாண்டார்கோவில் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

நாளை மின்தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், தாவூது மில், ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், முத்துடையான்பட்டி, கிளியூர், வடசேரிப்பட்டி, வாகவாசல், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாப்பட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி,

வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமி நகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

பரந்தாமன் நகர், கீழ காந்தி நகர்...

அம்மாசத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.

எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், பரந்தாமன் நகர், கீழ காந்தி நகர், மேல காந்தி நகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமை நகர், அழகு நகரம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்

குன்றாண்டார்கோவில்...

இதேபோல் குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.

எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், குன்றாண்டார் கோவில், தெம் மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, ராக்கத்தம்பட்டி, ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


Next Story