திருப்பாச்சனூர், சேமங்கலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


திருப்பாச்சனூர், சேமங்கலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:45 PM GMT)

திருப்பாச்சனூர், சேமங்கலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பில்லூர், கொளத்தூர், காவணிப்பாக்கம், சித்தாத்தூர், சேர்ந்தனூர், புருஷானூர், ஆனாங்கூர், அத்தியூர் திருவாதி, தென்குச்சிப்பாளையம், திருப்பாச்சனூர், தளவானூர், வேலியம்பாக்கம், வி.அரியலூர், சாமிப்பேட்டை, பிள்ளையார்குப்பம், கொங்கரகொண்டான், ராமநாதபுரம், அரசமங்கலம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இதேபோல் அரசூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சேமங்கலம் மின்னூட்டியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்தணியாலம்பட்டு, கீழ்தணியாலம்பட்டு, காரப்பட்டு, சேமங்கலம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.


Next Story