திருத்தணி பகுதியில் நாளை மின்தடை
திருத்தணி பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
திருவள்ளூர்
திருத்தணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்துள்ளார்.
அதன்படி மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:- திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, மத்தூர், முருக்கம்பட்டு, கார்த்திகேயபுரம், சரஸ்வதிநகர், பெரியகடம்பூர், சின்னகடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் நிறுத்தம் செய்யப்படும்.
Related Tags :
Next Story