இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:30 AM IST (Updated: 9 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடி, நல்லமனார்கோட்டை, ராமராஜபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

திண்டுக்கல்

கன்னிவாடி

கன்னிவாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தருமத்துப்பட்டி, சுரக்காய்பட்டி, பண்ணைப்பட்டி, சக்கரைக்கவுண்டன் சாலை, வெள்ளமரத்துபட்டி, கீழதிப்பம்பட்டி, மேலத்திப்பம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, தோனிமலை, ஸ்ரீராமபுரம், போலிமனூர், அரசமரத்துப்பட்டி, குள்ளம்பட்டி, ராமலிங்கம்பட்டி, பழைய கன்னிவாடி, கட்டச்சின்னாம்பட்டி, குரும்பபட்டி, கோம்பை, ராஜாபுதூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை கன்னிவாடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.

நல்லமனார்கோட்டை

இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த நல்லமனார்கோட்டை துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி நல்லமனார்கோட்டை, குளத்தூர், சூடாமணிபட்டி, காலனம்பட்டி, புளியமரத்துப்பட்டி, நாயக்கனூர், கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம், எஸ்.ஜி.பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் வடக்கு உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பணிகள் நடக்கிறது. இதையொட்டி ராமராஜபுரம், மட்டப்பாறை, விளாம்பட்டி, பெருமாள்பட்டி, கருப்பட்டி, இரும்பாடி நாச்சிகுளம், பொம்மன்பட்டி, குல்லலக்குண்டு, கல்லடிபட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இ்த்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

1 More update

Related Tags :
Next Story