இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் புறநகர்

திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்தார்.

சின்னாளப்பட்டி

இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த கீழக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது. இதையொட்டி செட்டியபட்டி, கல்லுப்பட்டி, எல்லப்பட்டி, காந்திகிராமம் பகுதிகள், அக்்ஷயாநகர், சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, அமலிநகர், முருகம்பட்டி, இந்திராபுரம், பெருமாள்கோவில்பட்டி பகுதிகள், செட்டியபட்டி, வலையபட்டி, வேளாங்கண்ணிபுரம், விநாயகபுரம், பாத்திமாநகர், சின்னாளப்பட்டி, கீழக்கோட்டை, பூஞ்சோலை, மேட்டுப்பட்டி, கோட்டைப்பட்டி, அம்பாத்துரை, கலைமகள் காலனி, திருநகர், ஹைஸ்கூல் பகிர்மானம், நேருஜிநகர், மெயின்பஜார், வடக்கு தெரு, சிறுமலை பழையூர், புதூர், அகஸ்தியார்புரம், தென்மலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று சின்னாளப்பட்டி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

செம்பட்டி

செம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. இதையொட்டி செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிபட்டி, முண்டாம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமராஜர் அணை பகுதிகள், பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் காலனி, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையன்கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று செம்பட்டி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story