இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

கபிலர்மலை பகுதியில் இன்றும், ஜேடர்பாளையம் பகுதியில் நாளையும் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

கபிலர்மலை துணை மின்நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம்,அய்யம்பாளையம், பாண்டமங்கலம்,வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர் செல்லப்பம் பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல் ஜேடர்பாளையம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.


Next Story