முன் அறிவிப்பின்றி ஏற்படும் மின்தடை


முன் அறிவிப்பின்றி ஏற்படும் மின்தடை
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:45 PM GMT)

திருமருகல் பகுதியில் முன் அறிவிப்பின்றி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகலில் துணை மின்நிலையம் இயங்கி வருகிறது.இந்த துணை மின்நிலையத்தில் இருந்து திருமருகல் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலைய கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் எவ்வித முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது.இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். .திருமருகல் பகுதியில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story