பொள்ளாச்சியில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி
பொள்ளாச்சியில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மின் கோட்டத்தில் மின் சிக்கன வார விழா மற்றும் விழிப்புணர்வு விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி மின்சார வாரியம் சார்பில் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இதை மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சந்திரசேகர் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கிவைத்தார். செயற்பொறியாளர் ராஜா முன்னிலை வகித்தார்.
பேரணி நியூஸ்கீம் ரோடு வழியாக வந்து காந்தி சிலை பகுதியில் முடிந்தது. மேலும் பொதுமக்களுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் உதவி செயற்பொறியாளர் மோகன், அதிகாரிகள், ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story